வலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்? மாப்பிள்ளை இவரா
ரஜினியின் காலா, அஜித்தின் வலிமை போன்ற படங்களில் நடித்து இருந்தவர் ஹுமா குரேஷி. அவர் ஹிந்தியில் பாப்புலர் நடிகை என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
அவரது Bayaan படம் சமீபத்தில் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இருந்தது. அந்த விழாவில் ஹுமா குரேஷியும் கலந்துகொண்டிருந்தார்.
நிச்சயதார்த்தம்
இந்நிலையில் நடிகை ஹுமா குரேஷிக்கு அவரது காதலர் ரஷித் சிங் என்பவருடன் நிச்சயதார்த்தம் சமீபத்தில் ரகசியமாக நடந்து முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஷித் சிங் பாலிவுட்டில் பல முக்கிய நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக ஹுமா குரேஷி மற்றும் ரஷித் சிங் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இருப்பினும் அது பற்றி அவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.