வலிமை படத்தை பார்த்துவிட்டு நடிகர் அஜித் செய்த விஷயம் ! ஆச்சர்யத்தில் இயக்குனர்..

Ajith Valimai Ajith kumar AK
By Jeeva Dec 01, 2021 12:00 PM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் உலகளவில் உள்ள அனைத்து ரசிகர்களிடையேயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இப்படம் அடுத்த மாதம் பொங்கல் அன்று பிரமாண்டமாக உலகமுழுவதும் வெளியாகவுள்ளது, இதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர். 

இதனிடையே இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தற்போது வலிமை படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வரவுள்ளது.

அதன்படி இன்று வலிமை படத்தின் இரண்டாவது சிங்கள் பாடலின் கிலிம்ப்ஸ் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அஜித் பொதுவாக தனது படங்களை வெளியீட்டுக்கு முன்பு பார்க்கமாட்டார். தனக்கான பணிகளை முடித்த பின் தான் அவர் படத்தை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆனால் வலிமை படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத சேசிங் காட்சிகள் இருப்பதால் படத்தை பார்க்கும் ஆவல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் இயக்குனர் வினோத்திடம் சொல்லி தனது வீட்டிலேயே படம் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்த பின் அஜித் இயக்குனர் வினோத்தை பார்ட்டியதாகவும், அவருக்கு ஒரு ஆச்சரிய பரிசையும் கொடுத்ததாக கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US