வலிமை திரைப்படம் இவ்வளவு பிரமாண்டமாக வெளியாக காரணமே அஜித்தின் பெற்றோர்கள் தானாம் !
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விரைவில் வலிமை திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் வலிமை திரைப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ளதால் வசூல் இப்படம் புதிய சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
மேலும் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் இப்படத்தின் முன் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் எச்.வினோத் பேட்டியளித்துள்ளது குறித்து தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி வலிமை படத்தை பார்த்துவிட்டு அஜித் இயக்குனர் வினோத்தை பாராட்டியாக கூறியிருந்தார்.
மேலும் அஜித் வலிமை படத்தை பார்த்துவிட்டு அவரின் பெற்றோர்களுக்கு காண்பித்துள்ளார். பின் படத்தை பார்த்துவிட்டு அவரின் பெற்றோர்கள் சொன்ன பதில் தான். போனி கபூர் இப்படத்தை ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்தார் என தெரிவித்துள்ளார்.