வலிமை - தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இருக்கும் ஒரு ஒற்றுமை.. அனைவரும் ஆச்சரியப்படும் விஷயம்
எச். வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித்துடன், நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குனர் எச்.வினோத்.
இதனை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் கைகோர்த்த எச். வினோத், தற்போது வலிமை எனும் பிரமாண்ட படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
எச். வினோத் தனது ஒவ்வொரு படங்களிலும் பல முக்கியமான விஷயங்களை குறியீடுகளாக காட்டியிருப்பார். அது அப்படத்தில் மிகமுக்கியமான ஒன்றாக அமைத்திருக்கும்.
அந்த வகையில் தற்போது, கார்த்தி நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கும் உள்ள ஒற்றுமையான குறியீடு ஒன்று தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்ட்டு வருகிறது.
அது என்னவென்றால், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில், வில்லன்கள் குதிரைகளை தங்களது வாகனமாக பயன்படுத்துவது, வலிமை படத்தில் உள்ள வில்லன்கள் பைக்குகளை பயன்படுத்துவது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதன்முலம் இரு காட்சிகளுக்கும் உள்ள ஒற்றுமை இருக்கும் என்று இணையத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே இப்படம் சாத்தான் ரைடர்ஸ்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியிருந்தது.
