தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்பதை நிரூபித்த அஜித் ! ரூ.200 கோடி வசூல் நிலவரம்..
வலிமை
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த மாதம் 24 ஆம் தேதி திரைக்கு வந்தது வலிமை திரைப்படம்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் வலிமை படத்திற்காக மீண்டும் வினோத் - அஜித் கூட்டணி இணைந்தது. இதனாலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் இருந்தது.
ஆனால் வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது, மேலும் படத்தின் வசூலும் பெரியளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி வலிமை படத்தின் வசூல் நிலவரம் குறித்தும் பல்வேறு விவரங்கள் பரப்பப்பட்டு வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை 200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததை உறுதி செய்தார்.

காலெக்ஷன் ரிப்போர்ட்
இதற்கிடையே தற்போது வலிமை படத்தின் Area Wise வசூல் நிலவரம் என்னவென்பது குறித்து பார்ப்போம்.
தமிழ்நாடு - ரூ.125+ கோடிகள்
கர்நாடகா - ரூ. 10+ கோடிகள்
கேரளா - ரூ. 3.5 கோடிகள்
தெலுங்கு மாநிலங்கள் - ரூ. 6+ கோடிகள்
வட இந்தியா - ரூ. 6 கோடிகள்
ஓவர்சீஸ் - ரூ. 50 கோடிகள்
மொத்தம் - ரூ. 200 கோடிகள்
[
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த KPY பிரபலம் தீனா ! கலகலப்பான ப்ரோமோ..