வலிமை மற்றும் பீஸ்ட் இந்த முக்கிய இடத்தில் நஷ்டத்தை சந்தித்துள்ளதா?- ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகிவிடும் என தெரிகிறது. விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் விரைவில் கமல்ஹாசனின் விக்ரம் படம் வெளியாக இருக்கிறது.
ரஜினியின் படம் மட்டும் எதுவும் ரிலீஸ் இல்லை, இந்த வருடம் அவரது படம் ரிலீஸ் ஆனால் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆன வருடம் என்ற பெருமையை பெற்றுவிடும்.
இதுவரை தமிழ் படங்களை தாண்டி மற்ற மொழி டப் செய்யப்பட்ட படங்கள் தான் தமிழகத்தில் அதிக வசூல் வேட்டை நடத்தியுள்ளன. RRR, KGF 2, புஷ்பா போன்ற படங்கள் செம வசூல் வேட்டை நடத்தின.

கேரளாவில் வெற்றி, தோல்வி அடைந்த படங்கள்
இதுவரை ரிலீஸ் ஆன அனைத்து படங்களும் லாபத்தை கொடுத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். தற்போது கேரளாவில் ரிலீஸ் ஆன படங்களின் இறுதி கட்ட தகவல் வந்துள்ளது.
எந்தெந்த் படங்கள் லாபம், நஷ்டம் என்ற விவரங்கள் இதோ,
- KGF 2- செம லாபம்
- RRR- லாபம்
- வலிமை- நஷ்டம்
- பீஸ்ட்- நஷ்டம்
- எதற்கும் துணிந்தவன்- நஷ்டம்
- டான்- நஷ்டம்
- காத்துவாக்குல ரெண்டு காதல்- நஷ்டம்