விஜய்யின் மாஸ்டர் பட சாதனையை முறியடித்த அஜித்தின் வலிமை- செம வசூல்
ரசிகர்களிடம் வசூல் சாதனை வைத்து சண்டைகள் இல்லாமல் இருக்காது. இப்போது அஜித்தின் வலிமை படத்தின் வசூலை வைத்து பெரிய நடிகர்களின் முந்தைய படங்களின் சாதனைகளுடன் போட்டி நடக்கிறது.
இதுவரையிலான வலிமை வசூல்
எச். வினோத் அஜித்தை வைத்து இயக்கியுள்ள இரண்டாவது படம் வலிமை. இப்படத்திற்கான பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் அதை படக்குழு பூர்த்தி செய்துள்ளனர்.
படம் ரிலீஸ் ஆன ஓரு வாரத்திலேயே ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது, இப்போது ரூ. 200 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை செய்து வருகிறது.

வெளிறாட்டில் வலிமை வசூல்
அஜித்தின் வலிமை படம் தற்போதைய நிலவரப்படி ரூ. 50 கோடி வரை வசூலித்துவிட்டதாம். குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், UAE/GCC/Saudi, UK/EU மற்றும் USA போன்ற இடங்களில் படத்திற்கு நல்ல வசூலாம்.
விஜய்யின் மாஸ்டர் வெளிநாட்டில் ரூ. 46 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். இதனால் அஜித் ரசிகர்கள் வலிமை பட வசூல் செய்தி கேட்டு செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

3வது வாரத்தில் வலிமை பட புக்கிங் எப்படி உள்ளது தெரியுமா?- ரசிகர்களின் ரியாக்ஷன்