சூப்பரு முக்கிய இடத்தில் விஜய்யின் மாஸ்டரை வீழ்த்திய அஜித்தின் வலிமை- மாஸ் வசூல்
அஜித்தின் வலிமை படத்தை பற்றிய பேச்சு தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
படம் ரிலீஸ் ஆகி கதை என்ன அஜித் செய்த கார், பைக் ரேஸ் சேஸிங் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டது. டுவிட்டரில் அனைவருமே படத்திற்கான நல்ல விமர்சனங்களை தான் கொடுத்து வருகிறார்கள்.
தற்போது இன்று காலை முதல் அஜித்தின் வலிமை பட கலெக்ஷன் விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
சென்னையில் ரூ. 1.82 கோடியும், தமிழகத்தில் ரூ. 36 கோடிக்கும் வசூலித்துள்ளது. கர்நாடகாவில் வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரமும் வெளிவந்துள்ளது.
அங்கு முதல் நாளில் ரூ. 4.50 கோடி வசூலித்துள்ளதாம், இது கடைசியாக வெளியான விஜய்யின் மாஸ்டர் ( ரூ. 4.30 கோடி) படத்தை விட அதிகம்.
அஜித்திற்கு விஸ்வாசம் படத்திற்கு பிறகு நல்ல மார்க்கெட் கர்நாடகாவில் உள்ளதாகவும் அடுத்தடுத்து நாட்களில் வசூல் அங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.