விஜய் கோட்டையில் பறக்கும் அஜித் கொடி, இப்படி ஒரு முன்பதிவா..
தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டு நடிகர்களுக்குள் போட்டி இருக்கும்.
அந்த போட்டி தான் படத்திற்கு படம் இவர்களின் வசூலை பல மடங்கு அதிகரிக்கின்றது.
அந்த வகையில் தற்போது அஜித்-விஜய் ரசிகர்கள் சண்டை தான் உச்சம். இந்நிலையில் அஜித் நடிப்பில் வலிமை படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் மீதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. மேலும், வலிமை படம் கேரளாவில் 250 திரையரங்கில் வெளிவருகிறதாம்.
அதோடு கேரளா என்பது விஜய்யின் கோட்டை என்றே சொல்லலாம். மோகன்லாலே அஞ்சும் அளவிற்கு விஜய் அங்கு மார்க்கெட் உள்ளவர்.
இந்த நிலையில் கேரளாவில் ஒரு திரையரங்கில் காலை 5 மணிக்காட்சி வலிமைக்கு 5 ஷோ ஓபன் பண்ண, அனைத்தும் ஹவுஸ்புல்.
அதோடு 6வது ஷோவும் புல் ஆகி வர, என்ன விஜய் கோட்டையில் அஜித் கொடி பறக்கிறதே என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.