வலிமை குறித்து பதிவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் ! இணையத்தில் வைரலான பதிவு..
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை, இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி நாடுமுழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் தொடங்கப்பட்டு ஷூட்டிங் நடந்து முடிவதற்கே நிறையே நாட்கள் ஆனதால், ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை எங்கு சென்றாலும் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
இதனால் வலிமை என்ற படத்தின் பெயர் இணையத்தில் பெரிய வைரலானது. அஜித் ரசிகர்களின் மாஸ் நாடு முழுவதும் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் புதிதாக வலிமை என்ற சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் இது குறித்து புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு #Valimai ஹாஷ் டேக்கையும் போட்டுள்ளார் முதல்வர்.
இதனால் தற்போது ரசிகர்கள் அந்த பதிவை இணையத்தில் வைரலாகி, வலிமை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக சிமெண்ட் “வலிமை”யை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார்.#Valimai pic.twitter.com/Dpj6lGH1Mh
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 16, 2021