வலிமை படத்தின் சென்சார் கட்.. முக்கிய காட்சிகளை நீக்கிய தணிக்கைக்குழு
அஜித் நடிப்பில் எதிர்பார்ப்புக்குரிய படமாக வலிமை உருவாகியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ஆம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது.
ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் 50% சதவீதம் இருக்கைகளோடு தான் இயங்கும் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து, வலிமை வெளிவருமா என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து இதுவரை எந்தஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், படம் சொன்ன தேதியில் வெளிவரும் என்று சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இந்நிலையில், வலிமை படத்தில் இருந்து சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் என்னென்ன என்று குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, வலிமை படத்திலிருந்து சில கெட்ட வார்த்தைகளையும், வன்முறை சம்மந்தப்பட்ட முக்கிய காட்சி ஒன்றையும் தணிக்கை குழு நீக்கியுள்ளதாம்.
அதுமட்மின்றி, மிருகங்கள் வரும் காட்சிகளையும், போதை பொருள் பயன்படுத்தும் காட்சியையும் நீக்கியுள்ளார்களாம்.
மேலும், முக்கியமாக வலிமை படத்தில் இடம்பெற்று இருந்த ' கடவுள் தான் நிஜ சாத்தான்' என்ற வசனத்தையும் தணிக்கைக்குழு மியூட் செய்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.