வலிமை இவ்வளவு நீளமான திரைப்படமா ! சென்சார் குறித்து வெளியான அப்டேட்..
நடிகர் அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
மேலும் வலிமை மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்தது.
செம மாஸ் மற்றும் கிளாஸ் காட்சிகளுடன் அமைந்திருந்த வலிமை படத்தின் ட்ரைலர் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே தற்போது இப்படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி UA சான்றிதழ் பெற்றுள்ள வலிமை திரைப்படம் 2 மணிநேரம் 58 நிமிஷம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீளமுடைய வலிமை திரைப்படம் எந்தளவிற்கு விறுவிறுப்பாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.