வலிமை படத்தின் வசூலை குறைக்கும் வெளிமாநில பாக்ஸ் ஆபிஸ் தளங்கள்
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
எல்லோரும் இந்த படத்தின் வசூல் என்ன , அந்த படத்தின் வசூல் என்ன என்று அடித்துக்கொள்கின்றனர். ஆனால், உண்மையான வசூல் என்பது என்ன என்று தான் யாருக்கும் தெரியவில்லை, ஏனெனில் இன்று வரை சரியான வசூல் என்ன என்பது இங்கு யாருக்கும் தெரிவது இல்லை.
ஓர் அளவிற்கு மட்டுமே உண்மையான வசூல் தெரிகிறது, இதை ஒரு சில பாக்ஸ் ஆபிஸ் தளங்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்.
குறிப்பாக அஜித் படங்களின் வசூலை தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருவார்கள். சமீபத்தில் வலிமை படம் கூட விநியோகஸ்தர்களிடம் விசாரிக்கையில் ரெக்கார்ட் கலேக்ஷன், எல்லோருக்கும் நல்ல லாபம் என கூறினார்கள்.
ஆனால், குறிப்பிட்ட தளங்களோ வலிமை ஏதொல் தோல்வி படம் போல் மிக குறைந்த வசூலையே காட்டி வருகின்றனர்.
அதுவும் 10, 15 கோடி குறைவாக, அதிலும் ஒரு வட இந்திய பாக்ஸ் ஆபிஸ் நிபுணர், வெளிப்படையாகவே என்னை வலிமை படத்தின் வசூலை குறைத்து சொல்ல அனுகினார்கள் என்று பொதுவெளியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதெல்லாம் இவர்கள் யாருக்காக செய்கிறார்கள் என்பது கூடிய விரைவில் வெளியே வந்து தான் ஆகவேண்டும்.