சென்னையின் முக்கிய திரையரங்கில் அஜித்தின் வலிமை பட காட்சிகள் இல்லை- கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
நாளை வியாழக்கிழமை, பிப்ரவரி 24ம் தேதியை எதிர்நோக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வழக்கமாக முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் பல நாட்களுக்கு முன்பில் இருந்தே திருவிழா கோலமாக இருக்கும். ஆனால் இப்போது கொரோனா காலகட்டம் என்பதால் அவ்வளவாக கொண்டாட்டங்கள் இல்லை.
ஆனால் அதிகாலை 4 மணி ஷோ இருப்பதால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
இப்போது ஒரு சோகமான தகவல் ஒன்று வந்திருக்கிறது. அதாவது சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்று ரோஹினி சினிமாஸ். இதில் எப்போதுமே ரசிகர்களின் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் இருக்கும்.
தற்போது ரோஹினி சினிமாஸில் வலிமை படத்தின் அதிகாலை 4 மணி காட்சி இல்லை என்று கூறிவிட்டார்கள். காரணம் விநியோகஸ்தர்கள் சில கண்டிஷன் போட்டதால் அதிகாலை 4 மணி ஷோ இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளனர்.