அஜித்தின் வலிமை படத்தின் FDFS குறித்து வந்த செம தகவல்- மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் வலிமை.
படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டே தொடங்கியது ஆனால் கொரோனா காரணமாக படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாக இருக்கிறது.
இரண்டு வருடங்கள் அஜித்தை திரையில் காணாத ஏக்கத்தில் உள்ள ரசிகர்களுக்கு வலிமை படம் குறித்து வரும் தகவல்கள் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் அதிகாலை ஷோக்கள் இருக்கும், அதை ரசிகர்கள் மேளம்-தாளம், பட்டாசு, ஆட்டம் பாட்டம் என கொண்டாடுவார்கள். கொரோனா காரணத்தால் அதையெல்லாம் சினிமா ரசிகர்கள் மிஸ் செய்து வருகிறார்கள்.
தற்போது என்ன தகவல் என்றால் அஜித்தின் வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சி பிப்ரவரி 24ம் தேதி அதிகாலை 1 காட்சி ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.