Pushpa- The Rise என்றால் அஜித்தின் வலிமை க்ளைமேக்ஸ், ஹாலிவுட் தரத்தில் உள்ளது- பிரபலம் கூறிய முதல் விமர்சனம்
அஜித்தின் வலிமை தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படம்.
பட படப்பிடிப்பை எப்படியோ படக்குழு பல பேராட்டத்திற்கு பிறகு முடித்து இப்போது ரிலீஸ் வரை வந்துவிட்டனர். இந்த வருட பொங்கலுக்கே படம் ரிலீஸ் ஆக வேண்டியது, ஆனால் கொரோனா பிரச்சனை தள்ளிப்போனது.
இப்போது படம் ஒருவழியாக இந்த மாதம் 24ம் தேதி பிரம்மாண்டமாக 4 மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
பட ரிலீஸ் செய்தி வந்துள்ள நிலையில் படத்தை சிலர் பார்த்து தங்களது விமர்சனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
அதில் ராஜேஷ் வசானி என்பவர், ஜீ ஸ்டூடியோஸ் குழுவுடன் இணைந்து வலிமை படத்தை பார்த்தேன், வியந்துவிட்டேன். Fast & Furious & Mission Impossible படங்களுக்கு இந்தியாவின் பதில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
புஷ்பா படம் தி ரைஸ் என்றால் வலிமை படம் கிளைமேக்ஸ் என்று பதிவு செய்துள்ளார்.
