ஹிந்தி பதிப்பில் எந்த ஒரு புரொமோஷனும் இல்லாமல் அஜித்தின் வலிமை இவ்வளவு வசூலித்துள்ளதா?
அஜித்தின் வலிமை ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படம். படத்தின் ரிலீஸ் இன்னும் தள்ளிப்போயிருந்தால் படத்தை பற்றியே ரசிகர்கள் மறந்திருப்பார்கள்.
அந்த அளவிற்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒருவழியாக கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியாகிவிட்டது.
வசூல் விவரம்
ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இப்போது ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. இன்னும் சில திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது, ஆனால் படம் வெற்றிப்படமாக அமைந்தது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷம் தான்.

ஹிந்தி பதிப்பின் வசூல்
வலிமை திரைப்படம் தமிழை தாண்டி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது. எல்லா இடங்களிலும் படத்திற்கு நல்ல புரொமோஷன் தான். ஹிந்தி பதிப்பிலும் ரூ. 16 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்துள்ளதாம், இத்தனைக்கு அங்கு சரியான புரொமோஷன் இல்லை என கூறப்படுகிறது.

காமெடி நடிகர் வையாபுரிக்கு இவ்வளவு பெரிய மகன், மகள் இருக்கிறார்களா?- லேட்டஸ்ட் க்ளிக்