வலிமை பட கதாநாயகியை கவர்ந்த நடிகர் விஜய்யின் வைரல் பாடல் !
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி நடிகர் அஜித்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் வலிமை படம் வெளியாக இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் நடிகை ஹுமா குரேஷி படத்தின் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார்.
அதன்படி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல் குறித்து பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது "நான் விரும்பி கேட்கும் தமிழ் பாடல் குட்டி ஸ்டோரி" என பதிலளித்துள்ளார்.
நடிகை ஹுமா குரேஷி இதற்கு முன் ரஜினியுடன் காலா திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பின் அவரின் இரண்டாவது தமிழ் படமாக வலிமையில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.