அஜித் எப்படிப்பட்டபவர் தெரியுமா, வலிமை ஹீரோயின் ஹுமா குரேஷி சொன்ன விஷயம்
அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதன் பின் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிப்போனது. தற்போது பிப்ரவரி 24ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக நடித்து இருக்கும் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி அளித்திருக்கும் பேட்டியில் அஜித் ஒரு ஜென்டில்மேன் என தெரிவித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது..
அவர் ஒரு ஜென்டில்மேன், மிக பெரிய ஸ்டார். உடன் பணியாற்ற அற்புதமான நபர். அவர் கடின உழைப்பாளி மற்றும் democratic. அவர் யாரிடம் இருந்து யோசனை வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வார். அவரை தெரிந்துகொண்டது மற்றும் அவருடன் நேரம் செலவிட்டது நான் அற்புதமாக உணர்கிறேன். அவர் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்தார் என உணர்கிறேன்.
இவ்வாறு ஹுமா குரேஷி தெரிவித்து உள்ளார்.