வலிமை ஹிந்தி வசூல் விவரம்: மாஸ்டரை விட இத்தனை மடங்கு அதிகமா
பிப்ரவரி 24ம் தேதி ரிலீஸ் ஆன வலிமை படத்திற்கு தமிழ்நாட்டில் நல்ல வசூல் கிடைத்து இருக்கிறது. முதல் நாள் வசூலில் இதுவரை வந்த தமிழ் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை வலிமை படம் எளிதில் முந்தி இருக்கிறது.
ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அதே நாளில் வலிமை வட இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 24ம் தேதி மாலை தான் வலிமை தியேட்டர்களில் வெளியானது, அதனால் ஹிந்தியில் முதல் நாள் வெறும் 50 லட்சம் ருபாய் தான் வசூலித்தது.
இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் வசூலோடு சேர்த்து தற்போது வலிமை படம் ஹிந்தியில் சுமார் 1.5 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் மாஸ்டர் படம் ஹிந்தி சர்கியூட்டில் முதல் நாளில் வெறும் 4 லட்சம் ருபாய் தான் வசூலித்தது, அது கரெண்ட் பில் கட்ட கூட போதாது என பாலிவுட் விமர்சகர் KRK விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வலிமை படம் முதல் நாளில் மாஸ்டரை விட 12 மடங்கு வசூல் எடுத்துள்ளது.
