வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த படத்தின் நாயகி! எப்போது ரிலீஸ் தெரியுமா?
நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் காண ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.
வலிமை படத்தின் புதிய ட்ரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இது குறித்து தற்போது வரை எந்தஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ள நடிகை ஹுமா குரேஷி படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிபடுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில் வலிமை ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
