இப்போவும் சொல்றேன்.. வலிமை சுமாரான படம் தான்! சீரியல் நடிகை ஸ்ரீநிதி மீண்டும் சர்ச்சை பேச்சு
அஜித்தின் வலிமை தியேட்டர்களில் ரிலீஸ் ஆன போது,படம் தனக்கு பிடிக்கவில்லை என youtube public opinion வீடியோவில் கூறி இருந்தார். அதனால்அஜித் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்தனர்.
அதன் பின் மனஅழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்த ஸ்ரீநிதி, சிம்புவை காதலிப்பதாக கூறி பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தார். மேலும் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டு வலிமை சுமாரான படம் தான் என கூறி இருக்கிறார் ஸ்ரீநிதி.
"வலிமை படத்தை பற்றி ஏன் விமர்சித்தேன் என்றால் அது ஒரு படம், அதை விமர்சனம் செய்ய யாருக்கு வேண்டுமானாலும் உரிமை இருக்கிறது."
"இப்போவும் கேட்டால் 'வலிமை சுமாரான படம்' என்று தான் சொல்வேன். அது எனக்கு பிடித்த படம் இல்லை என்றாலும் இந்த சமுதாயத்திற்கு தேவையான ஒரு படம் தான்" என ஸ்ரீநிதி குறிப்பிட்டு இருக்கிறது.
இப்போது எதற்காக வலிமை பற்றி மீண்டும் பேசுறீங்க என நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன அவர், 'என்னை வீட்டில் வைத்து பூட்டிவிட்டார்கள். தனிமையில் இருக்கிறேன். என்ன செய்ய' என கேட்டிருக்கிறார்.


Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
