மாஸ்டர் பட சாதனையை முறியடிக்காத அஜித்தின் வலிமை- இவ்வளவு குறைவா?
தமிழ் சினிமா பிரபலங்கள் இடையே அந்த காலத்தில் நிறைய போட்டிகள் இருந்தன. ஆனால் இப்போது இருக்கிறது பெரிய அளவில் இல்லை என்று தான் கூற வேண்டும்.
பிரபலங்கள் அனைவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்கள், அது ரசிகர்கள் மத்தியிலும் நல்லதாக பேசப்படுகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் அஜித், விஜய் ரஜினி ரசிகர்கள் படங்களின் சாதனையை பற்றி பேசுவது மட்டும் நிற்பதில்லை.
அப்படி இப்போதும் ஒரு விவரம் வைரலாகி வருகிறது.
வலிமை Vs மாஸ்டர்
அண்மையில் அஜித்தின் வலிமை திரைப்படம் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, அதுவம் மே 1ம் தேதி ஓடியது. ரசிகர்கள் அனைவருமே படத்தை பார்க்க ஆர்வம் காட்டினார்கள்.

மே 1ம் தேதி ஒளிபரப்பான வலிமை திரைப்படத்தை 5.68 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே பார்த்துள்ளார்களாம். ஆனால் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை 7 சதவீதம் பார்வையாளர்கள் கண்டிருக்கின்றனர்.
இதனால் சிலர் மாஸ்டர் பட சாதனையை வலிமை எட்டவில்லை என பதிவுகள் செய்து வருகிறார்கள்.
சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை மறைமுகமாக தாக்கிய Blue Sattai மாறன்- கோபத்தில் ரசிகர்கள்