வலிமை படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா
வலிமை திரைப்படம் தற்போது தென்னிந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள ஒன்று.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், வலிமை படம் பார்த்தவரின் விமர்சன பதிவு ஒன்று இணையத்தில் வைராலகி வருகிறது.
இதில் " ஜீ குழுவினருடன் வலிமை படம் பார்த்து ஆச்சரியப்பட்டேன். பாஸ்ட் அன்ட் பியூரியஸ் மற்றும் மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு இந்திய பதில், விரைவில் திரையில் தீயாக பரவ உள்ளது. போனிகபூரிடம் இருந்து ஒரு த்ரில்லர். உங்கள் மூச்சை உங்களிடமிருந்து அடித்து செல்லும். புஷ்பா ஆரம்பம் என்றால் வலிமை கிளைமாக்ஸ் " என கூறியுள்ளார்.