வலிமை முதல் நாள் உண்மை வசூல் வெளிவந்தது..விநியோகஸ்தரே அறிவித்தார்
வலிமை
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. எச். வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார்.
போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வலிமை படம் வெளிவந்த முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 34 கோடி வரை வசூல் செய்து, சர்கார் படத்தின் சாதனையை முறியடித்தது.
ஆனால், சிலர் இது உண்மையான வசூல் கிடையாது என்பது போல், கூறி வந்தனர்.
உண்மையான வசூல்
இந்நிலையில், வலிமை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே சுமார் ரூ. 35 - 37 கோடி வரை வந்துள்ளது என பிரபல விநியோகஸ்தர் உண்மையை கூறியுள்ளார்.
இதன்முலம், பாக்ஸ் ஆபிஸில் வலிமை படம் மாபெரும் சாதனையை செய்துள்ளது என உறுதியாகியுள்ளது.
30 வருடங்கள் கழித்து ஜோடி சேரும் பாக்யராஜ் - ஐஸ்வர்யா! போட்டோ வைரல்