வலிமை படத்தின் கதை என்ன தெரியுமா? நீங்களே பாருங்கள்..
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை.
பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் வெளியாகவுள்ள வலிமை படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் ரசிகர்களும் காண ஆவலோடு உள்ளனர்.
இதனிடையே வலிமை படத்தின் ட்ரைலரும் நாளை வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் Synopsis குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் "ஐபிஎஸ் அதிகாரியான அர்ஜுன், திருட்டு மற்றும் கொலையில் ஈடுபடும் சட்டவிரோத பைக் ரேஸ்சர்களை வேட்டையாடும் பணிக்காக புறப்படுகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.