வலிமை படம் பார்த்துவிட்டு அஜித் கொடுத்த ரியாக்ஸன், முதல் விமர்சனம்
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் உலகளவில் உள்ள அனைத்து ரசிகர்களிடையேயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படம் அடுத்த மாதம் பொங்கல் அன்று பிரமாண்டமாக உலகமுழுவதும் வெளியாகவுள்ளது, இதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இதனிடையே இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தற்போது வலிமை படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வந்தபடி இருக்கிறது.
இந்நிலையில் வலிமை படத்தின் எடிட்டிங் பணிகள் முடிவடைந்தநிலையில் அந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வினோத்தை நடிகர் அஜித் குமார் புகழ்ந்து தள்ளியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அஜித் "என்னுடைய சினிமா கேரியரில் வலிமை திரைப்படம் தான் பெஸ்ட் படம். நீண்ட நாட்களுக்கு பிறகு எனது ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு விருந்தாக அமையும். படத்தின் ஒவ்வொரு காட்சியும் நினைத்து பார்த்ததை விட ரொம்ப சூப்பரா வந்துருக்கு.
சண்டைக்காட்சி, சென்டிமென்ட் காட்சி என எல்லாமே சிறப்பா இருக்கு. நிச்சயம் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வசூலை குவிக்கும்" என அஜித் புகழ்ந்து தள்ளியுள்ளார்.