உலகம் முழுவதும் வலிமை திரைப்படம் எத்தனை திரையரங்கில் வெளியாகிறது தெரியுமா?
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை.
24 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ள வலிமை படத்தின் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் வலிமை வசூல் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதுமட்டுமின்றி தினமும் வலிமை படத்தின் புதிய ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி வலிமை திரைப்படம் உலகம் முழுவதிலும் மொத்தம் கிட்டத்தட்ட 4000 திரையரங்குகளில் வெளியாகிறதாம். இதன்முலம் வலிமை தான் அஜித்தின் படங்களிலே அதிக திரையரங்கில் வெளியானது என்ற பெருமையை பெற்றுள்ளது.