வலிமை படத்தின் டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா.. வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

valimai trailer ajith kumar h.vinoth
By Kathick Nov 28, 2021 01:40 AM GMT
Report

எச். வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் முதல் பாடல் 'நாங்க வேற மாரி' வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அதே போல் இப்படத்தின் Glimpse வீடியோவும் ,வெறித்தனமாக தல அஜித்தின் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது.

மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருப்பது, வலிமை படத்தின் டீசர் அல்லது டிரைலர் எப்போது வெளிவரும் என்று தான்.

இந்நிலையில் வலிமை படத்தின் டிரைலர் குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி, வலிமை படத்தின் 2 நிமிட டிரைலர் கட் தயாராகியுள்ளதாம். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனை எதிர்பார்த்து தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.      


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US