கோடிக்கணக்கில் விலைக்குப்போன வலிமை படத்தின் தமிழக உரிமை? - தல அஜித் செய்த மாஸ் சாதனை
தல அஜித் நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இயக்குனர் எச். வினோத் இப்படத்தை இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகர் ஹுமா குரேஷி மற்றும் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார்.
மேலும் இப்படம் தற்போது வரை எடிட் செய்யப்பட்ட காட்சிகளை சமீபத்தில் பார்த்த நடிகர் அஜித், இன்னும் கொஞ்சம் கமெர்ஷியல் விஷயங்கள் சேர்க்கும்படி இயக்குனரிடம் கேட்டுள்ளார்.
ஒரு பக்கம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பிஸ்னஸ் மறுபுறம் நடைபெற்று வருகிறதாம்.
இதில் தற்போது தமிழக உரிமம் மட்டுமே சுமார் ரூ. 60 கோடியில் இருந்து, ரூ. 80 கோடி வரை விற்று போயுள்ளதாக சில தரப்பில் இருந்து தெரிவிக்கின்றனர்.
மேலும் இது தல அஜித் செய்துள்ள மாபெரும் சாதனை என்றும் தெரிவித்து வருகின்றனர் கோலிவுட் வட்டாரங்கள்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
