அஜித்தின் வலிமை பட தலைப்பு மாற்றப்பட்டதா ! வெளியான புதிய தகவல், இதோ..
நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 தேதி வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் காண அவ்வளோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையே தென்னிந்தியாவின் டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது அஜித்தின் வலிமை திரைப்படமும் முக்கிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
அதன்படி தற்போது அஜித்தின் வலிமை திரைப்படம் தெலுங்கில் பலம் என்ற தலைப்பில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த போஸ்ட்டரை நீங்களே பாருங்கள்..
