மேக்கிங் வீடியோவை தொடர்ந்து வலிமை படத்தின் அடுத்த அப்டேட்.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் Glimpse வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதே போல் சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் ,வெறித்தனமாக தல அஜித்தின் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் அடுத்ததாக வலிமை படத்தின் மூன்றாம் பாடல் வெளியாவது குறித்து இந்த வார இறுதியில் அப்டேட் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள்.