வெளியாகும் முன்பே லாபத்தை ஈட்டிய அஜித்தின் வலிமை திரைப்படம், இத்தனை கோடியா?
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் Glimpse வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதே போல் சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் ,வெறித்தனமாக தல அஜித்தின் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது.
இதனிடையே தற்போது வலிமை திரைப்படம் விற்பனை குறித்த ரிப்போர்ட் ஒன்றை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் தற்போது ரூ.161 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இப்படம் வெளியாகும் முன்பே ரூ.11 கோடியை லாபமாக ஈட்டியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.