தெலுங்கில் விலை குறைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்ட வலிமை திரைப்படம் ! எதனால் தெரியுமா?
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை, பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே இப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் மற்றுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ள வலிமை படத்தை அனைவரும் எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் தினமும் வலிமை படத்தின் புதிய ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
வலிமை படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 750க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் பரவி வந்தது.
இதனிடையே வலிமை திரைப்படம் தெலுங்கில் 4 கோடி அளவில் முதலில் வியாபாரம் செய்யப்பட்டதாம், ஆனால் வலிமை படம் வெளியாகும் அடுத்த நாளே பவன் கல்யாணின் பீம்லா நாயக் திரைப்படம் வெளியாவதால் வலிமை படத்திற்கான விலை குறைக்கப்பட்டு 2.6 கோடி அளவில் விற்கப்பட்டதாம்.