தள்ளிப்போன வலிமை படத்தின் ரிலீஸ்! எப்போ வெளியாகிறது தெரியுமா?
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படம் ரசிகர்களிடையே மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து சமீபத்தில் வலிமையின் முதல் சிங்கள் பாடல் வெளியானது.
ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்ற வலிமையின் நாங்க வேற மாதிரி பாடல் யூடியூப்பில் அதிக பார்வைகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் வலிமை படத்தின் வெளியிட்டிற்காக காத்துகொண்டு இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், அக்டோபர் மாதம் அல்லது தீபாவளியில் வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என தகவல் பரவி வருகிறது.