வெளியாகும் முன்பே சொல்லப்பட்ட வலிமை Review, பதறிப்போன பிரபலம் செய்த விஷயம்...
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருந்த வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே மீண்டும் எப்போது வலிமை ரிலீஸ் குறித்து அறிவிக்கப்படும் என ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் 'வலிமை' திரைப்படம் முதல் பாதியில் விசாரணை காட்சிகளும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கும் என அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் பெயரில் ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
இதனால் பதறிப்போன ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்று தனது பதிவின் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.
This ID is Fake, please report and Block! Thank you ? pic.twitter.com/B1eYciqxPU
— Dhilip Subbarayan (@dhilipaction) January 25, 2022