வலிமையால் பல நூறு கோடி இழப்பு! இவ்வளவா? வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழ் சினிமா துறையில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதன் பின் லாக்டவுன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதே போல ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமும் தள்ளிப்போனது.
இந்த இரண்டு படங்களில் ஒரு படமாவது ரிஸ்க் எடுத்து வெளியாகி இருந்தால் நல்ல வசூல் ஈட்டி இருக்கும். பொங்கல் பண்டிகைக்கு பல படங்கள் வெளியானாலும் பெரிய ஹீரோ படங்கள் இல்லாததால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை. டிக்கெட் வசூல், ஸ்னாக்ஸ் விற்பனை என வருவாய் இழப்பு சுமார் 500 முதல் 600 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டில் தான் இவ்வளவு என்றால் பாலிவுட்டில் அதை விட பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அங்கு சுமார் 1500 கோடிக்கும் அதிகம் இழப்பு என பாலிவுட் மீடியாவில் செய்தி வெளியாகி இருக்கிறது.
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri