தல ரசிகர்கள் கொண்டாடும் ஒரு சூப்பர் செய்தி இதோ...
தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தை வினோத் இயக்க, யுவன் இசையில் போனிகபூர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் வலிமை படத்தின் கடைசி சில நாட்கள் படப்பிடிப்பு ரஷ்யாவில் கடந்த வாரம் தொடங்கியது, இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
ஆம், வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவடைய, படத்தின் ரிலிஸிற்கு படக்குழு தயாராகி வருகின்றது.
இப்படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சி செய்து வர, பலரும் அக்டோபர் 14 வந்தால் இன்னும் விடுமுறை அதிகம் நிறைய வசூல் பார்க்கலாம் என்று கூறி வருகின்றனர்.
எது எப்படியோ, தல வலிமையை முடித்துவிட்டார், கூடிய விரைவில் தன் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார் என்பதே தற்போதைய தகவல்.