வலிமை பட தயாரிப்பாளருக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் SJ சூர்யா ! என்ன காரணம் தெரியுமா?
தற்போது நடிகராக அசதி வரும் SJ சூர்யா முன்பு இயக்குனராகவும் வாலி, குஷு என பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய குஷி படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்த எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தை ரீமேக் செய்யவில்லை.
வாலியை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியிடமிருந்து அதன் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி அதனை இந்தியில் தயாரிக்க திட்டமிட்டார் போனி கபூர்.
அது தன்னுடைய கதை, தனது அனுமதியில்லாமல் வாலியை ரீமேக் செய்யக் கூடாது என எஸ்.ஜே.சூர்யா தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போனி கபூர் பட வேலைகளை தொடங்க அனுமதியளித்தது.
எனவே அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
