திடீரென வலிமை படத்தில் இருந்து நீக்கப்படும் முக்கிய காட்சிகள் ! படக்குழுவின் அதிர்ச்சியளிக்கும் முடிவு..
நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் நேற்று உலகளவில் பிரமாண்டமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இப்படம் பல இடங்களில் புதிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, தமிழ்நாட்டில் மட்டும் வலிமை 30+ கோடிகள் வசூல் செய்து ரெகார்ட் காலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது வலிமை திரைப்படத்தில் இருந்து முக்கிய காட்சிகளை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பலதரப்பிலும் வலிமை படத்தின் ரன் டைம் பெரிதாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர், இதனால் படக்குழு வலிமை பட தமிழ் வெர்ஷனில் இருந்து 12 நிமிட காட்சியை நீக்கியுள்ளார்களாம்.
ஹிந்தி வெர்ஷனில் 15 நிமிட காட்சியை நீக்கியுள்ளார்களாம், அதுமட்டுமின்றி நாங்க வேற மாறி பாடலையும் நீக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறித்து.