வலிமை படத்தின் டீசர் எப்போது தெரியுமா - ரசிகர்களுக்கு மாபெரும் சப்ரைஸ்
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் வலிமை.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
திரையுலக ரசிகர்கள் பட்டாளமே எதிர்பார்த்த வலிமை படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் First லுக் எப்படி வெளியாகி ரசிகர்கள் மகிழ்வித்ததோ, அதே போல் வலிமை படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாம்.
குறிப்பாக, அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வலிமை படத்தின் டீசர் வெளியாக பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.