மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் இணைந்த வலிமை பட பிரபலம்.. யார் தெரியுமா
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் லூசிபர்.
இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறார்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியது. முதலில் ஆக்ஷன் காட்சியை படமாக்குகின்றனர்.
இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இப்படத்தில் இணைந்துள்ளதை படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஆகியோருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா பகிர்ந்துள்ளார்.
தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்துக்கும் நீரவ்ஷா தான் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu