இன்று வெளியாகும் வலிமை படத்தின் மூன்றாவது சிங்கள்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் Glimpse வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதே போல் சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் ,வெறித்தனமாக தல அஜித்தின் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது.
இதனிடையே இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இன்று மாலை வலிமை படத்தின் மூன்றாவது சிங்கள் வெளியாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ரசிகர்களும் இது குறித்த ஹாஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.