அஜித்தின் வலிமை பட டிக்கெட் விலை இவ்வளவா?- போராட்டத்தில் குதித்த ரசிகர்கள்
போனி கபூர் தமிழ் சினிமாவில் தயாரிக்கும் இரண்டாவது படம் வலிமை. இந்த படம் ஆரம்பித்தது முதல் முடிவு வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துவிட்டது. இப்போது படு மாஸாக வரும் வியாழக்கிழமை படம் ரிலீஸ் ஆகிறது.
3 நாட்களுக்கு எல்லா இடங்களிலும் டிக்கெட் புக்கிங் முடிந்து ஹவுஸ்புல் ஆகிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் அடித்துபிடித்து டிக்கெட் வாங்கி வருகிறார்கள். தற்போது ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ஷோவிற்கான டிக்கெட் அதிகம் திரையரங்குகள் விற்பதாக செய்திகள் வந்த நிலையில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ரசிகர் ஷோவிற்கான டிக்கெட்டுகளுக்கு திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்க நிர்வாகம் அதிக தொகை கேட்பதாக கூறி ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தியேட்டர் மேலாளரையும் தாக்க முயன்றுள்ளனர். சம்பவம் கேள்விப்பட்டு போலீசார் வர அவர்களுக்கும் ரசிகர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.