நடிகர் அஜித்திற்காக சூப்பர் ஸ்டார் நடிகர்கள் செய்யவுள்ள விஷயம் ! உற்சாகத்தில் ரசிகர்கள்..
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படம் பல தடைகளை கடந்து விரைவில் வெளியாகவுள்ளது.
வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை தமிழ் மட்டுமின்றி பிரமாண்டமாக தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகயிருக்கிறது.
இதனிடையே இப்படத்தின் தமிழ் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் மற்ற மொழி ட்ரைலர்கள் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படத்தின் ஹிந்தி ட்ரைலரை அஜய் தேவ்கன், தெலுங்கு ட்ரைலரை மகேஷ் பாபு, கன்னட ட்ரைலரை கிச்சா சுதீப் உள்ளிட்டோர் 6.30 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
இதன் அறிவிப்பு போஸ்டர்களை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

