வலிமை பட ட்ரைலர் அப்டேட்டால் செம கடுப்பான ரசிகர்கள், அப்படி என்ன ஆனது தெரியுமா?
கடும் எதிர்பார்ப்பிற்கு இடையே வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
இப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு பெரியளவில் ப்ரோமோஷன் செய்யவில்லை. இந்த மாதிரியான விஷயங்களும் தற்போது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற விஷயங்களுக்கு இடையே ரசிகர்களுக்கு சந்தோஷமளிக்கும் வகையில் இப்படம் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.
ஆனால் அதிலும் ஒரு தடங்களை வைத்துள்ளது படக்குழு, ஆம் வலிமை ட்ரைலர் Zee Studios Official மற்றும் Sony Music South என இரண்டு சேனல்களில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இதனால் தற்போது ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளனர், ஒரே சேனலில் ரிலீஸ் செய்தால் வியூஸ் மற்றும் லைக்ஸ் உள்ளிட்ட விஷயங்களில் Records செய்ய காத்திருந்தார்கள்.
ஆனால் இரண்டு சேனலில் ரிலீஸ் ஆவது, புதிய Records படைக்க தடையாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.