வலிமை பட வில்லன் நடிகருக்கு திருமணம்! அழகிய புகைப்படங்கள் இதோ
அஜித் நடித்திருந்த வலிமை படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து இருந்தார். படம் கலவையான விமர்சனங்கள் பெற்று இருந்தாலும் அதில் வரும் சண்டை காட்சிகளுக்கு நல்ல பாராட்டு கிடைத்து இருந்தது.
துருவன்
வில்லன் கார்த்திகேயா உடன் அடியாளாக வரும் ரோலில் மலையாள நடிகர் துருவன் நடித்து இருந்தார். கார்த்திகேயா சாத்தானின் அடிமைகள் என்ற கேங் நடத்தி வருவது போல காட்டப்பட்டது. அந்த கேங்கில் முக்கிய நபரான அமித் என்ற கதாபாத்திரத்தில் துருவன் நடித்தார்.
கடந்த வருடம் நவம்பரில் வில்லன் நடிகர் கார்த்திகேயா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகர் துருவனுக்கு கடந்த 28ம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
திருமணம்
கேரளாவில் பாலக்காட்டில் திருமணத்தில் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
துருவன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது திருமண போட்டோவை பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதோ..