ஜனவரி மாதம் வெளியாகவுள்ள வலிமை இயக்குனர் வினோத்தின் மற்றுமொரு திரைப்படம்!

Valimai Ajith kumar Ak H.Vinoth Sathuranga Vettai 2
By Jeeva Dec 18, 2021 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் தான் எச்.வினோத்.

இவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் சிறந்த விமர்சனங்களை வெற்றியடைந்துள்ளது.

மேலும் தற்போது அஜித் நடிப்பில் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது எச்.வினோத்தின் மற்றுமொரு திரைப்படமும் அதே ஜனவரி மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், எச்.வினோத்தின் கதை மற்றும் திரைக்கதையில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை 2 திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அரவிந்த் சாமி மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எச்.வினோத்தின் கதையில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தை நிர்மல் குமார் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் வெளியாகவுள்ள வலிமை இயக்குனர் வினோத்தின் மற்றுமொரு திரைப்படம்! | Valimai Vinoth Sathuranga Vettai



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US