உலகளவில் வலிமை படத்தின் பிரமாண்ட வசூல் நிலவரம்! தற்போது வரை எத்தனை கோடிகள் தெரியுமா?
அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படத்திற்கு பல இடத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் பல்வேறு இடங்களின் வசூல் நிலவரங்கள் வெளியாகி வருகிறது.
அதன்படி தற்போது வலிமை படத்தின் ஒட்டுமொத்த வசூல் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதுவரை வலிமை திரைப்படம் 130+ கோடிகள் வசூல் ஈட்டியுள்ளதாம். தமிழ்நாடு - 85+ கோடிகள், இந்தியளவில் மற்ற மாநிலங்களில் - 15+ கோடிகள், Overseas - 30+ கோடிகள் என ஒரு கணக்கு சொல்லறது.