வலிமை திரைப்படத்தில் இருந்த யோகி பாபுவின் ஒரே ஒரு காட்சி ! வைரலான புகைப்படம்..
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படம் என்னதான் பலரிடமும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சாதனைகளையும் நிகழ்த்தி தான் வருகிறது.
இதனிடையே வலிமை திரைப்படத்தில் தான் நடிப்பதை முன்பே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் நடிகர் யோகி பாபு. ஆனால் படத்தில் அவரின் எந்த ஒரு காட்சிகளும் வரவில்லை.
படக்குழு அவரின் காட்சிகளை வேண்டுமென்றே நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. யோகி பாபுவின் சம்பளம் மற்றும் கால் ஷீட் பிரச்சனை காரணமாகவே இதை செய்திருக்கலாம் என தகவல் பரவி வந்தது.
இதனிடையே அனைத்து காட்சிகளையும் நிக்கியிருந்தாலும் யோகி பாபு வரும் ஒரே ஒரு காட்சியை கண்டு பிடித்துள்ளனர் ரசிகர்கள். ஆம் வேற மாறி பாடலில் அஜித் ஆடிக்கொண்டு இருக்கும்போது பின்னால் கூட்டத்தில் ஒருவராக நின்றுகொண்டு இருக்கிறார் யோகி பாபு.
இதோ அந்த புகைப்படத்தை நாங்களே பாருங்கள்.